அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் வித்தியாலய மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
(ஏ.ஜி.ஏ.கபூர்)
கடந்த 2012 ஆம் 2013 ஆம் வருடங்களில் நடை பெற்ற ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலய மாணவ, மாணவிகளையும், கற்பித்த ஆசிரியர்களையும் பெற்றோர் உள்ளிட்ட பாடசாலை சமுகம் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று பாடசாலை அதாஉல்லா ஆர்ட் கலரி யில் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.உவைஸ்; தலைமையில் இன்று (12.03.2014) புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தேசிய தலைவருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.காசீம்,பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான அ.ஸ. அஹமட் கியாஸ், அஷ்ஷேய்க் ஏ.எம்.றஹ்மதுல்லா மௌலவி,; கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.கபூர், கணக்காளர் கே.றிஸ்வி யஹ்ஸர், அட்டாளைச்சேனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.நபீல்,; மக்கள் வங்கியின் பதில் முகாமையாளர் ஏ.ஜி.நிஸாம், அஸ்-ஸிறாஜ் ஜுனியர் கல்லூரி அதிபர் எஸ்.றினோஸ்டீன்,ஆகியோர்கள் கலந்து கொண்டதோடு, அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள், அஸ்-ஸிறாஜ் வித்தியாலய பிரதி அதிபர், ஆசிரியர்கள், புலமைப் பரிசில் பரீட்சைக்குக் கற்பித்த ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புலமைப் பரிஸில் பரீட்சையில் 2012 ஆம் ஆண்டில் சித்தியடைந்த 19 மாணவ, மாணவிகள் மற்றும் 2013ம் ஆண்டில் சித்தியடைந்த 22 மாணவ, மாணவி;களும் அமைச்சர் உட்பட அதிதிகளால் வெற்றி விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் முதலியன வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்கள். 2012 மற்றும் 2013 ஆண்டு புலமைப் பரிசில பரீட்சையில் சித்தி;யடைந்த மாணவ,மாணவிகளுக்குக் கற்பித்த ஆசிய, ஆசிரியைகளான எம்.பி.எம்.சரீப், றிஸ்பானா றிபாஸ், எம்.எம்.தஸ்ரிபா, எஸ்.நாஸர், எப்.யூ.அமீறுதீன் ஆகியோர்களும் , தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரைக் கற்பித்த 41 ஆசிரிய, ஆசிரியைகளும் பெற்றோர்களால் பரிசு வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
2012, 2013 ஆம் வருடங்களில் அதிபர் களாகக் கடமையாற்றிய அஷ்ஷேய்க் ஏ.எம்.றஹ்மதுல்லா மௌலவி(பிரதிக் கல்விப் பணிப்பாளர்) எம்.ஐ.எம்.உவைஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் மற்றும் பரிசு வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதோடு, பிரிவுத் தலைவர்களாக கடமையாற்றிய எம்.ஐ.எம்.இல்யாஸ், எப்.எச்.சித்தீக்கா ஆகியோர்களும் நிiவுச் சின்னம், பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இந் நிகழ்வில் சிறப்பாக பரத நாட்டியம் ஆடிய மாணவியொருவருக்கு மக்கள் வங்கியில்; சேமிப்புக் கணக்குத் திறந்து ருபா 5000.00 வைப்பிலிட்டு அதற்காண பாஸ் புத்தகமும் வழங்கப்பட்டன.



Post a Comment