தென்கொரியாவுக்கு செல்லவிருந்த யானையை தடுத்துநிறுத்தினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தென்கொரியாவிலுள்ள தனியார் மிருகக்காட்சிசாலையொன்றுக்கு 'தினிது' எனும் 05 வயது யானைக்குட்டியொன்று நன்கொடையாக வழங்கப்படவிருந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டினால் அது நிறுத்தப்பட்டது.
மேற்படி யானைக்குட்டி தென்கொரிய மிருகக்காட்சிசாலைக்கு இன்றைய தினம் 12-03-2014 வழங்கப்படவிருந்தது,
யானைக்குட்டியை நன்கொடையாக வழங்குவதை உடனடியாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றி தினத்தில் (மே 19, 2009) பிறந்ததினால் 'தினிது' யானைக்குட்டி விசேடமானதாக கருதப்படுகிறது.

Post a Comment