Header Ads



கிழக்கு மாகாண அமைச்சரவையின் தீர்மானங்கள்

(ஏ.எல்.ஜனூவர்)

அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண அமைச்சரைவியின தீர்மானத்தை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வெளியிட்டார்.

01. கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் திட்டமிடல் வைத்தியராக நியமனம்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமை புரிந்து ஓய்வு பெற இருக்கும் னுச.திருமதி.P.மு.ஞானகுணாளனை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் திட்டமிடல் வைத்தியராக 1 வருட காலத்திற்கு ஓப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை னுச.திருமதி.P.மு. ஞானகுணாளனை ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் வழங்குவதற்கான சிபாரிசினை வழங்கியது.
  
02. கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பாடசாலை கல்வி சாரா சிற்றூழியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்தல்.
கிழக்கு மாகாணத்தின் பாடசாலை கல்வி சாரா சிற்றூழியர் வெற்றிடங்கள் 618 உள்ளன. இவ்வெற்றிடங்களில் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் 100 பேர் வீதம் 300 சிற்றூழியர்களை நியமிப்பதற்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தை கோரி கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.விமல வீரதிஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை மூன்று மாவட்டங்களிலும் 300 சிற்றூழியர்களை நியமனம் செய்வதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.

03. கிழக்கு மாகாணத்தின் கல்வி செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்கு (தொண்டர்) ஆலோசகர் குழு ஒன்றை நியமித்தல்.
கிழக்கு மாகாணத்தின் 5 வருட கல்வி அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் செயற்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், இலங்கையில் தேர்ச்சி பெற்ற 19 பேரினைக் கொண்ட (தொண்டர்) குழு ஒன்றை நியமனம் செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.விமலவீர திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை அதற்கான அனுமதியினை வழங்கியது.    

04. கிழக்கு மாகாண கலாச்சாரப் பணிப்பாளர், சம்மாந்துறை வலக் கல்விப் பணிப்பாளர், மகாஓய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களின் சேவையினை ஒப்பந்த அடிப்படையில் 1 வருடம் நீடித்தல்.  
கிழக்கு மாகாண கலாச்சாரப் பணிப்பாளர் திரு.னு.று.ரு.வெலிகல, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ரு.டு.ஆ.ஹாஸிம், மகாஓய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ரு.ர்.அமரரத்ன ஆகியோரின் சேவைக் காலத்தை 1 வருட காலத்திற்கு நீடித்து வழங்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.விமலவீர திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை அதற்கான அனுமதியினை வழங்கியது.
05.  ஆசிரிய ஆலோசகர்களின் பிரயாணக் கொடுப்பனவை 2500ஃ- ரூபாவாக அதிகரித்தல்.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் கடமை புரியும் ஆசிரிய ஆலோசகர்களின் மாதாந்த பிரயாணக் கொடுப்பனவினை 1000ஃ- ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. ஏனைய மாகாணங்களில் இக் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே கிழக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர்களின் பிரயாணக் கொடுப்பனவாக 2500ஃ- வை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு. விமலவீர திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை அக் கொடுப்பனவை 2500ஃ- ரூபாவாக வழங்குவதற்கான அனுமதியினை வழங்கியது.

06. கிழக்கு மாகாண பொறியியலாளர்களின் இடமாற்றத்தை 06 மாத காலத்திற்கு பிற்போடுவதற்கான அனுமதி.
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. சில தொடர் வேலைகளும் உள்ளதுடன் நிறைவு செய்யப்பட்ட வேலைத் திட்டங்களை மக்களிடம் கையளிக்கப்பட வேண்டியுள்ளதால் 06 மாத காலத்திற்கு கிழக்கு மாகாண பொறியியலாளர்கள் 06 பேரினது இடமாற்றத்தை பிற்;போடுவதற்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தை கோரி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை கிழக்கு மாகாண பொறியியலாளர்கள் 06 பேரின் இடமாற்றத்தை 06 மாத காலத்திற்கு பிற்போடுவதற்கான அனுமதியினை வழங்கியது. 

1 comment:

  1. கல்வி நிருவாக சேவையிலுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட காலம் முடிவடைந்ததையும் தாண்டி மீண்டும் நீடித்துக் கொடுப்பதானது,இளைய தலைமுரையச்செர்ந்த நிருவாகிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தட்டிப்பறிப்பதாகவே கருதப்படவேண்டும்.இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் ஓய்வூதியம் அடையும் இநிலையில் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் அதிகாரிகளின் கனவுகளில் எரியும் கல்லாகவே இதனை நான் கருதுகிறேன்.தமது அரசியல் செல்வாக்கைப்பயன்படுத்தி மீண்டும் மீண்டும் சேவை நீடிப்புக்களைப்பெற்றுக்கொண்டிருக்கும் இவர்கள் புதியன புகுவதற்கு தடையாக இருக்கின்ற முள் வேலிகளே!கிழக்கு மாகான சபை தமது முடிவுகளை மீள்பரிசீலனை செய்து மாகான மக்களுக்கு நவீன சிந்தனைகளை அடங்கிய செவிய வழங்குவதற்கு முன்வரவேண்டும்.இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடுவது?

    ReplyDelete

Powered by Blogger.