ரவூப் ஹக்கீம் சொல்வது போன்று முஸ்லிம் காங்கிரஸினால் தீர்மானம் எடுக்க முடியாது - சம்பிக்க ரணவக்க
மேல் மற்றும் தென் மாகாண தேர்தல்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக அமைச்சர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையயில் மருதானையில் நடந்த மற்றுமொரு தேர்தல் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சம்பிக் ரணவக்க,
2016 ஜனாதிபதியைத் தீர்மானிப்பது நாங்கள் என்ற தோரனைணில் ஹக்கீம் வீராப்புப் பேசி இருக்கின்றார். மேலும் கிழக்கு மாகாண ஆதிக்கம் பற்றியும் அவர் பெரிதாக பேசி வருகின்றார். ஹக்கீம் சொல்வது போன்று அவருடைய கட்சியால் தீர்மானம் எடுக்க முடியாது. அப்படி எடுத்ததாலும் ரவூப் ஹக்கீமுன் இன்னும் ஓரிருவரும்தான் வெளியேறுவார்கள், ஏனையோர் ஜனாதிபதியுடன் தான் இருப்பார்கள் என்று சம்பிக்க அந்தக் கூட்டத்தில் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

நாய் பேயெல்லாம் பேசுது. சிறுபான்மையென்றால் இவருக்கு அலர்ஜி பிடிக்காது.
ReplyDelete