Header Ads



இலங்கையர் என்ற ரீதியில் ஜெனிவா பிரேரணைக்கு ஒன்றுதிரண்டு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும்

ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்படுகின்றமைக்கு அனைவரும் எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டுமென பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் பிரதியமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

ஜெனிவாவில் இன்று பிரேரணையொன்றை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையை நாடு எதிர்நோக்கியுள்ளது. இந்த பிரேரணை நிறைவேற்றப்படுகின்றமைக்கு நாம் அனைவரும் எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும். சில அமைச்சர்கள் வாக்குகளை பெற்றுக் கொள்ளவதற்காக இனம் தொடர்பில் முன்னிலையில் இருந்து செயற்படுகின்றனர். எனினும், எமது அரசாங்கத்திற்கு ஜெனிவாவில் எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர். அமெரிக்காவினால் கொண்டுவரப்படுகின்ற பிரேரணைக்கு எதிரான இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு எமது எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும்.

2 comments:

  1. நாம் அனைவரும் இலங்கையர் என்று உங்களுக்கு தேவைப்படும்போது மட்டுமே சொல்லுங்கள்.பிரச்சினையென்று ஒன்று வரும்போது சிங்களவர் வேறு,தமிழர் வேறு என்று சொல்லுங்கள்,மேலும் இன்னாடு பௌத்தம் என்றல்லாம் சொல்லுங்கள்.

    நாம் அனைவரும் இலங்கையர் என்ற வகையில், சிருபாண்மை மக்களுக்கு எதிராக வந்துகொண்டிருக்கின்ற,வந்து சென்ற பிரச்சினைகளின்போது என்கே போய்விட்டது "நாம் அனைவரும் இலங்கையர்" என்ற உங்கள் மந்திரம்?

    மகா ஜனங்களே,பொன்னான உங்கள் வாக்குகளை உங்களை மேலும் மேலும் முட்டாலாக்கும் எந்த ஷக்திக்கும் ஆதரவாக செலவுசெய்ய வேண்டாம்.

    ReplyDelete
  2. There is no need for Geneva convention if there is religious freedom, peace and harmony among the people. Before you oppose Geneva matter, you need to condemn voilence against muslims and attack on religious places. First you need to concentrate to punish the culprits who attack on minorities and their religious places. Please understand that the country's situation is worse if there is no law and order.

    ReplyDelete

Powered by Blogger.