Header Ads



நானும் ஒரு அகதியாக வந்தவனே, ஏழை மக்களின் பசி பட்டினியை உணர்ந்திருக்கின்றேன் - றிஷாத் பதியுதீன்


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

பாதிக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அந்த மக்களுக்காக குரல் கொடுப்பதற்கும் அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்தற்குமே அகில இலங்கை மக்கள் காங்கிரஸை நாம் உருவாக்கினோம் என்று அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மேல்மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் ஹசன் மௌஜூத்த ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ பாரூக், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் வேட்பாளர் ஹசன் மௌஜூத்  உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இங்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் உரையாற்றுகையில் அகில இலங்கை காங்கிரஸ ஆட்சியில் பங்காளிக்கட்சியாக இருந்த போதும் நாம் தனித்துவமானவர்கள்.

தனித்துவம், தனித்துவமென்று மேடைகளிலே முழங்கிக்கொண்டிருப்பவர்கள் நாமல்ல. நாம் தனித்துவமாக அரசியல் நடத்தியபோதிலும் ஜனாதிபதியுடன் அவ்வப்போது எமது பிரச்சினைகளை எடுத்துக்கூறி உரிய தீர்வை பெற்றுக்கொடுத்து வருகின்றோம். இது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாம் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட முன்வந்தது இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் கொழும்பு மாவட்த்தில் குறிப்பாக முஸ்லிம் மக்களின் தலைமைத்துவத்தில் ஓர் இடைவெளி ஏற்பட்டிருந்தமையை உணர்ந்தே. இங்கு வாழ் முக்கியஸ்தர்கள் எம்மை தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தினர். அவர்களின் அன்பான வேண்டுகோள்களை புற்கணிக்க முடியாமையினால்தான்  நாம் களத்தல் குதித்தோம்.

இன்று கொழும்பு வாழ் மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் பொருளாதார பிரச்சினை ஒருபுறமிருக்க அவர்களுக்கு  ஒழுங்கான வாழ்விட வசதி, குடிநீர், சுகாதார வசதிகள் என பல அவசிய தேவைகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. இன்னும் சேரிப்புற வாழ்க்கையையே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். காலத்துக்கு காலம் தேர்தல் வரும்போது இங்குள்ள பிரதேசங்களுக்கு வந்து தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகளை அள்ளிவீசுச் செல்லும் இந்த அரசியல்வாதிகள் பின்னர் அந்த மக்களை ஏறடுத்தும் பார்ப்பதில்லை இந்த நிலையை மாற்றுவோம் நாம் கொழும்பிலே ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை  மாற்றுவோம். நானும் ஒரு அகதியாக வந்தவனே ஏழை மக்களின் பசி பட்டினியை நான் உணர்ந்திருக்கின்றேன். ஆகவே உங்கள் பிரச்சினைகளுக்கு என்னால் முடிந்தவரை தீர்வை பெற்றுத்தருவேன்.

உங்கள் பிள்ளைகள் படித்து சமூகத்துக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பயனுள்ள பிரிஜைகளாக திகழவேண்டும் என்பதே எனது ஆதங்கம் வடக்கில் எமது மக்களின் நல்வாழ்வுக்காக எவ்வாறு பாடுபடுகின்றோமோ அதே அளவு கொழும்பு வாழ் மக்களின் வாழ்விலும் கவனம் செலுத்துவோம். உங்கள் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த உழைப்போம். ஏழை மக்களின் வாழக்கை தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

கிரான்பாசிஸிலும்; தெஹிவளையிலும் தெமட்டகொடையிலும் இனவாதிகள் முஸ்லிம் சமூகத்தின் வழிபாட்டு சுதந்திரத்தை பறித்தெடுக்க வந்தபோது நாமும் அந்த மக்களுடன் நின்று போராடி வெற்றி பெற்றோம்.

இரவோடு இரவாக எமது உயிரையும் துச்சமென மதித்து காடைத்தனங்களை தவிடுபொடியாக்கினோம். நாம் ஏசி அறைகளில் அமர்ந்து கொண்டு அறிக்கைகள் விடுபவர்கள் அல்ல பதவி என்பது இறைவன் தந்த அமானிதம் நாம் அதனை பயன்படுத்தி மக்களுக்கு சேவை புரியாவிட்டால் மறுமைநாளில் தப்பமுடியாமல்  போய்விடும் எனவே கொழும்பு வாழ் மக்கள் இம்முறை எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்து கொழும்பு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவி புரியுமாறு வேண்டுகிறேன்

1 comment:

  1. அவரு அகதியா வந்தவருதான் . வெற்றிலைச்சின்னத்தில் வாக்கு கேட்பார்... நல்ல பொட்டு மஹிந்த மாமாவ இருத்தாட்டுங்க.. வெளி நாடும் இல்லாட்டி சில ஊர்கள் நாரும்.......

    ReplyDelete

Powered by Blogger.