ரவூப் ஹக்கீமின் நல்ல மனசு..!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்; தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் திங்கள் கிழமை (10) மாலை பேருவளை சீனங்கோட்டை, மருதானை பிரதேசங்களில் மேல்மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றினார்.
அதைத் தொடர்ந்து பேருவளையைச் சேர்ந்த சித்திக் என்பவர் ஆழ்கடலில் மாரடைப்பால் மரணமடைந்த செய்தியை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்று சம்பவம் பற்றி கேட்டறிந்ததோடு, ஆறுதல் கூறி ஜனாஸாவை இயன்றவரை விரைவாக கொண்டு வந்து சேர்ப்பது தொடர்பில் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.
சித்திக் என்பவர் பல நாட்கள் கடலில் சஞ்சரிக்கக் கூடிய சக்தி வாய்ந்த (மல்டி டே பிஷிங் போட்) மீன்பிடி வள்ளத்தில் திசையறி கருவியை பயன்படுத்தி கெப்டனாக பணியாற்றி அந்த வள்ளத்தை பேருவளை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு கிழக்குத் திசையில் திருகோணமலையிலிருந்து 200 கடல் மைல் தூரத்தில் செலுத்திச் சென்ற வேளையில் மாரடைப்பினால் மரணித்ததாக கூறப்படுகிறது.
அவரது ஜனாஸாவை குறித்த வள்ளத்தில் இலங்கைக்கு அருகில் கொண்டு வந்த நிலையில் கடற்படை அதிவேக வள்ளத்தில் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் உரிய மரண விசாரணையின் பின்னர் பேருவளைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உடனேயே அமைச்சர் ஹக்கீம் திங்கள் கிழமை நள்ளிரவில் திருகோணமலை நீதவான், மரணவிசாரணை அதிகாரி ஆகியோரோடு தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தார். பின்னர் செவ்வாய்க்கிழமை காலையில் அவர் திருகோணமலை பெரிய ஆஸ்பத்திரி மருத்துவ சுப்ரிண்டண்டண் டாக்டர் கவிஷேகர உடன் தொடர்பு கொண்;ட பொழுது, அவர் ஜனாஸா விடயத்தில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் ஹக்கீமிடம் உறுதியளித்தார்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர்
ரவூப் ஹக்கீம் அவர்களின் ஊடக ஆலோசகர்

இதில் என்ன நல்ல மனது?தேர்தல் காலம் இல்லாவிடின் இவர் டெலிபோன் இதற்கெல்லாம் வேலை செய்யவாபோகுறது.சாதாரணமானவர்கள் கூட இதனை செய்து முடிப்பார்கள். அக்காரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவூதி அரசால் கட்டப்பட்ட ஐநூறு வீடுகளையும் இதுவரை மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாமல் போடப்பட்டிருக்கும் முட்டுக்கட்டையை முடியுமென்றால் அகற்றட்டும் அப்பொழுது கர்ம வீரன் என்று கூறுகிறோம்.,அதுவரைக்கும் இதுபோல புருடாக்கள் வேண்டாம்.
ReplyDelete