Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு அரசிற்கான வாக்கு வங்கிகளை நிரப்புகிறது - ரவிகருணாநாயக்க


அரசாங்கத்தில் அமைச்சர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை மின்சார கதிரைக்கு கொண்டு செல்லப் போவதாக மக்களை அச்சுறுத்துகிறார்கள். இருப்பினும் இந்நாட்டின் தலைவர்கள் மின்சார கதிரைக்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. வுடன் ஒப்பந்த மொன்றை கைச்சாத்திட்டுள்ளார். எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எவ்வகையிலும் மின்சார கதிரையில்  அமர்த்த முடியாது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.

மேல் மாகாண சபைக்கு கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க. வில் போட்டியிடும் கே. பழனியாண்டியின் காரியாலயத்தை திறந்து வைத்து  உரையாற்றும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார். 

எதிர்வரும் 29 ஆம் திகதி நடத்தப்படவுள்ள மாகாண சபை தேர்தலுக்கான வாக்குகளை சேகரிக்கவே இத்தகைய பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.

இம் மாகாண தேர்தலில் அரசின் பங்காளி கட்சிகளான சிறுபான்மையின கட்சிகள் தனித்து  போட்டியிடுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு அரசிற்கான வாக்கு வங்கிகளை சேகரிக்கின்றனர். அதே போன்று தமிழ் அரசியல் வாதிகளும், தமது சமூகத்தை காட்டிக் கொடுத்து விட்டனர்.

எனவே, இவ்வரசாங்கத்தின் இனவாதத்தை தூண்டும் அரசியல் நடாத்தும் போக்கினை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

இந்நிலையில், இந்நாட்டில் அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை ஐ.தே.க. வினால் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்றார்.  vi

No comments

Powered by Blogger.