ஈராக்கில் பெண்களின் திருமண வயதை ஒன்பதாக குறைக்க சட்டமூலம்
(Tn) ஈராக்கில் திருமணம் முடிக்கும் பெண்களின் குறைந்த வயது எல்லை ஒன்பதாக குறைக்கும் புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளது.
இது பெண்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று பெண் உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த சட்டமூலத்திற்கு ஈராக் அமைச்சரவையில் அண்மையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது விரைவில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
"இது மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல் என நாம் நம்புகிறோம். இது ஒரு சிறுமியின் சாதாரண சிறுவர் பராயத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கையாகும்" என்று மனித உரிமைகள் தொடர்பான ஈராக்கின் முன்னணி சட்டத்தரணி ஹனா எடுவார் குறிப்பிட்டார். ஈராக் பெண்கள் சுதந்திரம் என்ற அமைப்பின் தலைவர் யானார் மொஹம்மட் கூறும்போது, "இந்த சட்ட வரைவு வெறுமனே பாலுறவு இன்பத்திற்காகவும் ஆண்களின் உரிமைக்காகவுமே கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது சிறுவர் உரிமையை மீறுவதோடு அவர்களது உடல் தகுதியையும் கவனத்தில் கொள்ளவில்லை" என்றார்.
புதிய சட்டமூலத்தில் பெண்களின் திருமண வயது 18இல் இருந்து 9ஆக குறைக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாது பெண்கள் தனது கணவனின் அனுமதி இன்றி வீட்டை வீட்டு வெளியேறுவது தடுக்கப்பட்டிருப்பதோடு, கணவன் தனக்கு தேவையான எந்த நேரத்திலும் பாலுறவில் ஈடுபடவும் அனுமதிக்கிறது.
இந்த சட்டமூலம் 'pயா ஜபாரி பிரிவை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இந்த பிரிவு எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் ஒருவரினால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இதனால் இந்த வரைவை சபாரி சட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த சட்டமூலத்திற்கு எதிராக சர்வதேச பெண்கள் தினமன்று ஈராக்கில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
இந்த வரைவை அகற்றிக் கொள்ளும்படி ஐ.நா. சபை ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.
ஈராக்கின் தற்போதைய தனிநபர் சட்டம் பிராந்தியத்திலேயே சிறந்ததாக பார்க்கப்படுகிறது. எனினும் இந்த சட்டங்கள் 'ரிஆ மதச் சட்டத்திற்கு முரணானது என்று ஈராக் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

Post a Comment