Header Ads



ஜனாதிபதி செயலகத்தை நோக்கி மாணவர்கள் - கண்ணீர்ப்புகை அடித்து தடுத்துநிறுத்திய பொலிஸார் (வீடியோ)


பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு – கோட்டை பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் நிலவுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் களனி பல்கலைக்கழக மாணவர்களால் இன்று 19-03-2014 ஆரம்பிக்கப்பட்டது.

களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குள்ள தங்குமிடப் பிரச்சினையை நிவர்த்தி செய்யுமாறு கோரி, மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், அதியுயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வதைத் தடுக்கும் விதமாக கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


1 comment:

  1. இலங்கையில் இலவசக் கல்வி வழங்கப்படுவதாகப் பீற்றிக் கொண்டாலும், இன்றைய கல்வி வியாபாரப் பண்டமாகவே மாற்றப்பட்டுள்ளது.

    கல்வியை வர்த்தகப் பண்டமாக்குவதற்கு எதிராகவும், கல்விக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் பணத்தில் ஒரு பகுதியை வெட்டி விட்டு கல்வியின் மொத்தச் சுமையையும் சமூகத்தின் மீது சுமத்துவதற்கு எதிராகவும், களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் மாத்திரமன்றி முழு நாட்டிலுமுள்ள பெற்றோர், மாணவ சமூகத்தினர், ஆசிரிய சமூகத்தினர் அனைவரும் திரண்டெழ வேண்டும்.

    ஏனெனில், கல்வியே இலங்கை மக்களின் எதிர்காலச் சொத்தாகும். அதனை தனவந்தர்களின் பிள்ளைகளுக்கு மாத்திரம் உரிமையாக்கி விடும் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.

    2014ம் ஆண்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலைக் கல்விக்கான மீண்டெழும் செலவீனம் வெட்டப்பட்டுள்ளது. 2013ல் மீண்டெழும் செலவு என்ற வகையில் 3401 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இவ்வருடம் 2676 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மீண்டெழும் செலவீனங்கள் வெட்டப்படுவதானது, பாடசாலைத் தொகுதிகளை நடாத்திச் செல்லும் சுமையும் பெற்றோரின் மீதே சுமத்தப்படுவதற்கு காரணமாக அமையும்.

    எனவே களனிப் பல்கலைக்கழக மாணவர்களின் இன்றைய போராட்டம் எதிர்காலத்தில் மேலும் நாடளாவிய ரீதியில் வீச்சம் பெறும் என்பது திண்ணம். அதனை கண்ணீர்ப் புகையால் அரசாங்கம் அடக்கி விட முடியாது.

    -புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.