Header Ads



படிவங்களால் அவஸ்தைப்படும் ஆசிரியர்கள்..!

(அபூதனா)

அக்கரைப்பற்று வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் கடமை புரியும் ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை வருடாவருடம் திரட்டுவதற்கு கணினி மயப்படுத்தப்பட்ட விண்ணப்;பப் படிவம் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறே 2014க்குரிய விண்ணப்பப்படிவத்தை புகைப்படமும் ஒட்டி அனைத்து ஆசிரியர்களும் அதிபரூடாக வலயக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டனர்.தற்போது மாகாண கல்வித்திணைக்களத்தால் 4 பக்கங்களைக் கொண்ட விண்ணப்பப் படிவம் ஒன்று வலயக்கல்விப்பணிப்பாளர் ஊடாக அனைத்து ஆசிரியர்கட்கும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படம் இதில் ஒட்டப்பட்டு 3 பிரதிகளில் ஒப்படைக்கப்பட வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. விடயங்களும் , இதனுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களும் ஆசரியர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்துகின்றன. 

(உ-ம்) வதிவிடச் சான்றிதழ்,வாக்காளர் இடாப்புப்பிரதி

புனிதத் தொழிலான ஆசிரியர் தொழிலைச் செய்யும் இவர்களிடம் கேட்கப்படும் தகவல்கள் இவர்களை போலி ஆசிரியரா? ஏனத் துருவித்துருவி ஆய்வது போல உள்ளது. புதிதாக ஒரு அரச தொழிலுக்குச் சேர உள்ளவர்களிடம் நேர்முகப்பரீட்சையில் கேட்கப்படும் ஆவணம் போலுள்ளது. இது இப்பிராந்திய ஆசிரியர்;களை அவமதிப்பது போலுள்ளது.உடனடியாக இவ்விடயத்தில் பிரதேச அரசியல் வாதிகளும் ,ஆசிரியர் சங்கங்களும் தலையடை வேண்டுமென இப்பிரதேச ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பு- அலுவலகத்தில் பேணப்படும் சுய விபரக்கோவையில் உள்ள தகவல்களையே மீண்டும் மீண்டும் கோருகின்றனர்.
தகவல்கள் கோரப்படுவதற்காக கூறப்படும் காரணங்களாவன , 

01.ஆசிரியர்களின் சுயவிபரக் கோவைகளைச் சீராக்கல்
02.கஸ்டப்பிரதேசப் படிகள் யாருக்கு வழங்கப்படலாம் என்பதைத் தீர்மானித்தல்
03.இடமாற்றங்களுக்காக சரியான தகவல்களை அறிதல் 
04.ஓய்வு பெறும் ஆசிரியர்களின் ஆவனப்பிரச்சினைகளைத் தீர்த்தல் 
இவற்றை மேலோட்டமாக ஆயும் போது வலயக்கல்வி அலுவலகங்களில் உள்ள ஆசிரியர்களின் சுயவிபரக்கேவைகள், சரியாகப் பேணப்படவில்லை. போல உள்ளது இதற்கு யார் பொறுப்பு? ஆசிரியர்கள் பொறுப்பு ஏற்கமுடியுமா? இதற்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் ஓய்வூதியம் கிடைக்கவில்லையா?   வரலாற்றுத் தாள் ஏன் சரியாகப் பேணப்படவில்லை.(ஹிஸ்ரி சீட்)

சுனாமி ,பயங்கரவாதம் ,வெள்ளம் ,தீவிபத்து போன்ற காரணிகளால் தனது வீட்டில் இருந்த ஆவணங்களைப் பறிகொடுத்த கிழக்குமாகாண ஆசிரியர்கள் எப்படி ஆவணங்களை மீள ஒப்படைப்பர். இப்படியான ஒரு தகவல் திரட்டல் கிழக்குமாகாணத்தைத் தவிர வேறு எந்த மாகாணத்திலும் இல்லை. இதனை அதிமேதகு ஜனாதிபதியின் கவனத்திற்கும் , கல்வியமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வோமாக. 
 

No comments

Powered by Blogger.