லெபனானில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் மரணம்
தலைநகர் பெய்ரூட்டுக்கு வடக்கிழக்கில் மெட்ன் பிரதேசத்தில் தார் அல் பாஷேக் வீதியில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கனமழை பெய்து கொண்டிருந்த போது அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 12-03-2014 உயிரிழந்துள்ளார்.
வனிதா பட்டிக்கிரி என்ற இலங்கை பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லெபானில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விபத்துக்களில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அட்லுன் நகரில் சீதேன் - டயர் நெடுஞ்சாலையில் இன்று நடந்த கார் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
.jpg)
Post a Comment