அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியால இல்ல விளையாட்டு விழா
(ஏ.எல்.ஜனூவர்)
அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலத்திற்கான விளையாட்டு மைதானம் திறந்து வைக்கும் நிகழ்வும் வருடாந்த இல்ல விளையாட்டு விழாவும் நேற்று (11.03.2014) பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் தலைமையில் இடம்பெற்றது.
தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சினால் வழங்கப்பட்ட ரூபா 9 இலட்சம் நிதியின் மூலம் இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மிக நீண்ட காலமாக இவ்விளையாட்டு மைதானம் புனரமைக்கபடாமல் இப்பாடசாலை மாணவர்கள் தமது விளையாட்டு நிகழ்ச்சிகளை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வந்திருந்தனர்.
பாடசாலைக்கு மைதானம் இல்லாத குறைபாடு தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலை சமூகம் பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவிடம் எடுத்துக்கூறியதன் பயனாக இம்மைதானம் புனரமைக்கபட்டு மாணவர்களின் பாவனைக்காக பிரதி அமைச்சர் சரத் வுPரசேகரவினால் திறந்து வைக்கப்பட்டது.
இதனை அடுத்து இடம் பெற்ற விளையாட்டு விழாவை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு மாணவர்களினால் உத்தியோகபூர்வ கொடி ஏந்தப்பட்டு ஓலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கபட்டு வழளையாட்டு போட்டி நிகழ்சிகளும், உடற்பயிற்சிக் கண்காட்யியும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைப்பட்டன.
புhடசாலை அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொழில், தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் சரத்வீரசேகர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.வீரசிங்க, வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.




Post a Comment