ஏ.எல்.நௌபீல் எழுதிய 'கல்விச் சமூகம் எதிர்பார்ப்பும் வகிபங்கும்' நூல் வெளியீடு
(எம்.ஏ.றமீஸ்)
ஏ.எல்.நௌபீல் எழுதிய 'கல்விச் சமூகம் எதிர்பார்ப்பும் வகிபங்கும்' நூல் வெளியீட்டு விழா அண்மையில் இறக்காமம் பிரதேச சபை அரங்கில் இடம்பெற்றது.
பிரதேச சபைத் தவிசாளர் யூ.கே.ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, பீகாஸ் கெம்பஸ் தலைவர் பொறியியலாளர் எம்.எம்.அப்துல் றஹ்மான், அபிவிருத்திக் கற்கைகள் மையத்தின் பணிப்பாளர் றவூப் செய்ன், ஜப்பானி அரச விஸேட கல்வித்துறை உறுப்பினர் சத்தோசிகிம்குமா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜீ.சி.எம். அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவின்போது நூல் ஆய்வுரையினை ஆசிரியம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தெ.மதுசூதனன் நிகழ்ந்தினார்.




Post a Comment