புத்தளத்தில் விழிப்புணர்வூட்டும் ஊர்வலம்
(அபூ முஸ்னா)
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு; புற்று நோய், நீரிழிவு நோய் மற்றும் தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறுவோம் எனும் தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஊர்வளம் ஒன்றில் புத்தளம் தள வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று 13-03-2014 வியாழக்கிழமை ஈடுபட்டனர். இதன் போது நகரில் மக்களுக்கு தொற்று நோய் தொடர்பில் தெளிவூட்டும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன் ஊர்வளத்தின் பின்னர் தொற்று நோய்களினால் ஏற்படும் பயங்கர விளைவுகள் சம்பந்மான பெனர்கள் மற்றும் பதாதைகளை தாங்கியவாறு அவர்கள் அணிவகுத்து நின்றனர்.
இன்று காலை 11 30 மணியளவில் புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேரா தலைமையில் ஆரம்பமான இந்த ஊர்வளத்தின் போது புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஊர்வளம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமாகி குருணாகல்-புத்தளம் பிரதான வீதியின் ஊடாக சென்று புத்தளம் நகரின் பல இடங்களிலும் புத்தளம் மக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்பட்டது.




Post a Comment