கல்முனை சாஹிரா கல்லூரி மீது அவதானம் வேண்டும்...!
(குருவி)
கல்முனை சாஹிரா கல்லூரியில் ஆசிரியர் தாக்குப்பட்ட செய்தியை ஜப்னா முஸ்லிமில் படிக்க கிடைத்தது. ஒரு பாடசாலையின் மாணவர்;களது ஒழுக்க செயல்களை யார் பொறுப்பு எடுப்பது என்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
ஆனால் குறிப்பிட்ட கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது போல் சம்பவங்கள் பல பாடசாலைகளிலும் ஏற்படுவது இயல்பானதுதான். அவை பாடசாலையின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துமாயின் இது விடயத்தில் பாடசாலைச் சமூகம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழையமாணவர்கள் என்று பலரும் இதில் அக்கறை எடுத்துச் செயற்பட வேண்டியிருக்கின்றது.
குறிப்பிட்ட பிரச்சினை பாடசாலையோடு முடிந்திருந்தால் யாரும் கருத்தில் எடுக்காதும் விட்டிருக்கலாம்; ஆனால் இப்பிரச்சினை பொலிஸ் நிலையம்வரை சென்றிருக்கிறது என்றால் இதுவிடயத்தில் கவனம் எடுப்பதில் அவசியம்; இருக்கிறது. பாடசாலையிலுள்ள சில ஆசிரியர்களும் இதை இப்படியே விடக்கூடாது விட்டால் நாளை நமக்கும் இதுதான் நிலை என்று மாணவர்களை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தியிருக்கின்றார்கள்.
இதனடிப்படையில் பார்க்கும் போது இப்பாடசாலையின் நலனில் அக்கறை வைத்து நடுநிலையாகச் செயற்படுவதாக கூறிய மகாசங்;க அமைப்பினர்; தொடர்;ந்தும் பாடசாலையின் செயற்பாடுகளுடன் எந்தளவு அக்கறையாக இருக்கின்றார்கள் என்பதை கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கின்றது. பிரதிக் கல்விப் பணிப்பாளரின் பிரச்சினைக்காக மட்டும் மகாசங்கம் உருவாகிச் செயற்பட்டது என்றால் நாங்கள்; அவர்களிடம் பாடசாலை தொடர்பாக எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமில்;லை.
ஆனாலும் பிரதிக்; கல்விப் பணிப்பாளர் மீது எதிர்ப்பானவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி பாடசாலை என்ற பொது ஸ்த்தாபனத்தை பயன்படுத்தி இந்தப் பிரச்;சினையை பெரிதாக்கி ஊருக்காக வலயத்தில் இருந்த ஒரேஒரு பிரதிக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்துவிட்டு தங்களது பணி இத்;துடன் முடிந்தது என்று கலைந்துவிட்டார்களா? என்ற ஆதங்கம்;தான் குறிப்பிட்ட கட்டுரையினை வாசிக்கும் போது வெளிபபட்டது. உண்மையில் அந்த சாதனையைத்தான் மகாசங்கம்; செய்தது என்றால் இதில் நடுநிலைமையும் இல்லை பொதுநலனுமில்லை. இது வெறும் பழிவாங்கும் படலமே.என்றுதான் பார்க்க வேண்டும்.
மாணவன் ஆசிரியருக்கு அடித்த பிரச்சினையை பிரதிக் கல்விப் பணிப்பாளரின் பிரச்சினையோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதில் ஒரு நியாயம் இல்லாமலும் இல்லை. ஆழமாக நோக்குகின்;ற போது அதிலுள்ள நியாயங்களை சிந்திக்கத் தெரிந்தவர்கள் ஏற்றுக்கொள்வார்;கள்.
மாணவன் ஆசிரியருக்கு அடித்ததற்கு நாங்கள் என்ன செய்வது? என்ற கேள்;வியை மகா சங்கம் கேட்கலாம் பிரதிக் கல்விப் பணிப்பாளரின் பிரச்சினையோடு தொடர்புபட்டதுபோல் தொடர்ந்தும் பாடசாலையோடு தொடர்புபட்டு பாடசாலையின் நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்குள் ஒழுக்கவிழுமியங்களை ஏற்படுத்துவதற்கும் மகாசங்கம் போதிய ஒத்துழைப்புக்களை வழங்கி இருக்க வேண்டும்;.
தற்காலிகமாக நியமிக்கப்பட்ட புதிய அதிபர் தற்போது மீண்டும் வலயக் கல்வி அலுவலகத்திற்குச் செல்ல விரும்புவதாகவும் கதைகள் வெளிவந்தள்ளது. பாடசாலையில் மூன்று நான்கு ஆசிரியர்கள் தனக்கு எந்தவிதமான ஒத்துழைப்புக்களையும் தருகின்றார்கள் இல்லை என்பதுதான் அதற்கான காரணம் என்றும் அவர்; குறிப்பிட்டிருக்கிறார்.
புதிய அதிபரை கொண்டுவந்த மகாசங்கம் பாடசாலை நடவடிக்கைகளோடு தொடர்;ந்தும் ஈடுபாட்டுடன் இருந்து நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காது பாடசாலை நடவடிக்கைகளுக்கு பிரச்;சினைகளை உருவாக்குகின்றவர்களை அடையாளம் கண்டு அவர்களோடு கலந்துரையாடி அவர்களது ஒத்துழைப்புக்களை பாடசாலைக்கு பெற்றுக்கொடுத்திருக்காலாம் அல்லாது போனால் அந்தப் பாடசாலையிலிருந்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்திருக்கலாம்,
தெரிந்தோ தெரியாமலோ மகாசங்கம் சாஹிரா கல்லூரிப் பிரச்சினைக்குள் மூக்கை நுழைத்துவிட்டது. அதனால் பாடசாலையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளின் போதும் மகாசங்கம் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் மகாசங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறில்லாமல் எதையுமே இனி மகாசங்கம் பாராது இருந்தால் அது பிரதிக்; கல்விப் பணிப்பாளருக்கு எதிரான சங்கம் என்பதே உண்மையாகும்.
.jpg)
Post a Comment