கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம்
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
கொழும்பு –12, வாழைத்தோட்டம் அல் ஹிக்மா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட புதிய கட்டிடம் எதிர்வரும் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான கே.எம்.எம். நாளிர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஹமீடியாஸ் நிறுவனத்தின் தலைவர் பௌசுல் ஹமீட், அம்ஜா டிரவல்ஸ் உரிமையாளர் எச்.எம்.அம்ஜதீன், பூக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.யு.எம்.உவைஸ், தொழிலதிபர் ஜிஸ்தி பௌமி உட்பட முக்கியஸ்தர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளனர்.
பழைய மாணவர் சங்கத்தின் அனுசரனையில் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி இந்த முதற்கட்ட நிர்மாண பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. சகல வசதிகளுடன் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்திற்கு 'பழைய மாணவர் சங்க கட்டிடம்' (PPயு டீரடைனiபெ) என பெயரிடப்பட்டுள்ளது.
புதிய வகுப்பறைகளுக்குத் தேவையான பல இலட்சம் ரூபா பெறுமதியான புதிய தளவாடங்களும் அன்றைய தினம் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை, மேற்படி கட்டிடத்தின் இரண்டாவது கட்டவேளைத்திட்டமும் அன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
கொழும்பு வாழ் முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் வாழைத்தோடம் பிரதேசத்தில் அமைந்துள்ள அல் ஹிக்மா கல்லூரியின் பௌதீக வள மேம்பாட்டையும் கருத்திற் கொண்டு கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய வேலைத்திட்டங்களின் ஓர் அம்சமாகவே இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Post a Comment