Header Ads



அவுஸ்திரேலியாவில் இலங்கையர் படுகொலை

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வந்த இலங்கை தமிழ் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இக்கொலைச் சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

விசா ஈசன் என்ற 48 வயதுடைய நபரே தனது அலுவலகத்திற்கு முன்னால் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த நபரின் மனைவி தனது முதல் குழந்தையை பெரும் ஆசையுடன் கர்ப்பிணியாக உள்ள நிலையில் இக்கொலை இடம்பெற்றுள்ளது. 

மார்புப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட ஈசன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார். 

கொலையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

விசா ஈசன் 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.