Header Ads



மலேஷிய விமானத்துடையது என நம்பப்படும் பாகங்களின் புகைப்படங்களை சீனா வெளியிட்டது


காணாமற்போனதாக கூறப்படும் மலேஷிய விமானத்துடையது என நம்பப்படும் பாகம் தொடர்பான புகைப்படங்களை சீனா வெளியிட்டுள்ளது.

தென்சீனக் கடற்பரப்பில் மிதக்கும் விமானத்துடையது என  சந்தேகிக்கப்படும் பெரியளவிலான பாகமொன்றின் மூன்று புகைப்படங்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

229 பேருடன் பயணித்த குறித்த விமானம் கடந்த சனிக்கிழமை காணாமற்போயிருந்ததுடன், இந்தப் புகைப்படங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

எனினும் நேற்றைய தினமே விஞ்ஞானத்திற்கான சீன அரச நிர்வாக இணையத்தளத்தில்  இந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விமானங்களை கண்காணிப்பதற்காக துல்லியமான பல்வேறு செய்மதிகளை நிலைநிறுத்தியுள்ளதாக சீன மக்கள் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும் காணாமற்போவதற்கு முன்னர் விமானத்துடனான இறுதி தொடர்பாடலின் போது எந்தவொரு பிரச்சினையும் இல்லை என   தகவல் வழங்கப்பட்டதாக  மலேஷியா கூறியிருந்தது.

இந்த நிலையில் விமானத்தை தேடும் பணிகள் பன்நாட்டு ஒத்துழைப்புடன் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


No comments

Powered by Blogger.