முஹம்மது நபியின் வாழ்க்கையிலிருந்து ஏராளமான முன்மாதிரிகளை பெறமுடியும் - வஜிர தேரர்
மிருகத்திற்கும் மனிதனுக்குமிடையில் வேறுபாட்டினைக் கண்டுகொள்ள முடியாத ஒரு யுகத்தில் இந்த உலகில் தோன்றிய நபி அவர்கள் அந்தச் சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.
முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினத்தினைக் கொண்டாடுமுகமாக ஏராளமான முஸ்லிம்களின் பங்கேற்புடன் கிரேன்ட்பாஸ் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற வைபவத்தின் போதே சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அக்கமகா பண்டிதர் கும்புறுகமுவே வஜிர தேரர் இங்கு இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,
அன்று வாழ்ந்த துஷட சமூகத்தை ஒரு குறுகிய காலத்தினுள் நல்வழிப்படுத்துவதற்கு அவருக்கு இயலுமாகியது. அதுபோலவே எந்தவொரு தருணத்திலும் அவர் பிழையான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எந்நேரமும் ஓர் உன்னத சமூகத்தைத் தோற்றுவிப்பதற்காக முயற்சி எடுத்தார்.
அதன் காரணமாக சமூகத்திலிருந்து அவருக்குப் பாரிய தொல்லைகள் கொடுக்கப்பட்டன. அவர் இறக்கும்போது அவரிடம் அவருக்குச் சொந்தமாக அவர் அணிந்திருந்த ஆடையும் நீர்க்குவளையொன்றும் மாத்திரமே எஞ்சியிருந்தன. அவ்வாறான மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கையிலிருந்து ஏராளமான முன்மாதிரிகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறினார்.
ஜனாதிபதியின் பௌத்த மதவிவகாரங்களுக்கான இணைப்பாளர் சங்கைக்குரிய கலகம தம்மரங்ஸி தேரர், ஜனாதிபதியின் இஸ்லாம் மதவிவகாரங்களுக்கான இணைப்பாளர் மௌலவி செய்யது ஹஸன் மௌலானா, ஜனாதிபதியின் கிறிஸ்தவ மதவிவகாரங்களுக்கான இணைப்பாளர் அருட்தந்தை சரத் ஹெட்டிஆராச்சி உட்பட மதப் பிரதிநிதிகளும் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி உட்பட ஏராளமானோர் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.

முஹம்மது நபியின் வாழ்விலிருந்து ஏராளமான முன்மாதிரிகளை பெறமுடியும் என்று தேரரே சொல்லுகிறார்,இந்த உண்மையை இன்றைய இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக்குள்ள தவறியதன் விளைவே இந்த மாதிரியான மீலாத்விழாக்கள் நடைபெற காரணம்.
ReplyDeleteநபிகளாரின் அந்த 23 வருட காலத்திலோ,அல்லது அவரின் மரணத்திற்கு பின்னர் அவருடைய உத்தம சீடர்களோ இப்படியான கொண்டாட்டதை ஒருபோதும் எடுத்ததில்லை என்பதை நம்மவர்கள் அறிந்திருந்தும் அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்காகவன்றி இதனை கொண்டாடாமல் விட்டதில்லை.
தேரருக்கு எட்டிய அறிவு கூட மேலே வசனமமைத்தவருக்கு புரியவில்லை... என்ன செய்வது.........
ReplyDelete