Header Ads



ஜனாதிபதி ஒரேநாளில் 4 முறை Call எடுத்தும் பதிலளிக்காத அநுரகுமார திசாநாயக்கா


ஜே.வி.பியின் புதிய தலைவராக தாம் தெரிவு செய்யப்பட்டமையை வாழ்த்தி ஜனாதிபதியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு, தாம் பதில் வழங்கவில்லை என்று கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மூன்றாம் திகதி ஜனாதிபதியிடம் இருந்து 4 அழைப்புக்கள் வந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியை பொறுத்தவரை அவ்வாறு வாழ்த்து தெரிவித்ததன் பின்னர் அதனை வைத்துக்கொண்டு ஊடகத்தில் பிரசித்தம் பெறுவதை வழமையாக கொண்டுள்ளார். எனவேதான் அதற்கு தாம் இடம்தரவில்லை என்று அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தமக்கு அழைப்பு ஏற்படுத்தும் போதே தமக்கு அடுத்த நாள் பத்திரிகையில் பிரசித்தம் பெறுவதற்கு அவர் முயற்சிக்கிறார் என்று தமக்கு தெரியும் என்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு தமது பிறந்த நாளன்று ஜனாதிபதி தமக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதன்போது தமக்கும் ஜனாதிபதிக்கும் மாத்திரமே இது தெரியும் என்று நினைத்திருந்த போது,  ஞாயிறு பத்திரிகையில் அது செய்தியாக வெளியானது என்பதையும் அநுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.