181 பயணிகளுடன் மெக்சிகோ விமானம் அமெரிக்காவில் அவசரத் தரையிறக்கம்
சன்விங் ஏர்லைன்ஸ் என்ற தனியார் விமான நிறுவனத்தின் போயிங் 737 விமானம் ஒன்று 181 பயணிகளுடன் கனடாவிலிருந்து புறப்பட்டு மெக்சிகோவிற்கு பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் ஆறு ஊழியர்களும் பணியில் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் காற்றில் ஏற்பட்ட மாறுபாட்டினால் விமானம் குலுங்கத் தொடங்கியது. அப்போது பயணிகளின் தேவைகளுக்கு உதவிக் கொண்டிருந்த விமான ஊழியர் ஒருவர் தலையில் இடித்துக் கொண்டதில் ரத்தக்காயம் அடைந்துள்ளார். மற்றொரு பணிப்பெண்ணும் பயணிகளுக்கான சேவையில் ஈடுபட்டிருந்தார். அவரும் உயரத் தூக்கியடிக்கப்பட்டு கீழே விழுந்துள்ளார்.
இதனால் அந்த விமானம் அமெரிக்காவின் மான்டெனா பகுதியில் இருந்த ஹெலினா பிராந்திய விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கம் செய்யப்பட்டது. அடிபட்ட அந்த இரு ஊழியர்களும் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பயணிகள் அனைவரும் விமானத்திலேயே ஐந்து மணி நேரம் காத்திருந்த பின்னர் விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் நேற்று மாலை மற்றொரு விமானத்தில் அவர்கள் அனைவரும் மெக்சிகோவின் புவர்டோ வல்லர்டாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானிகளும், பயணிகளும் தங்களுடைய சீட் பெல்டுகளை அணிந்திருந்ததால் மற்ற எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று சன்விங் நிறுவனத்தின் தகவல் தொடர்பாளரான ஜெனைன் சாப்மென் தெரிவித்தார்.

this happened by pilot's careless. may be the operating pilot, co pilot were un care about. usually Boing air bus models auto pilot system will be switched on by next 5 - 10 min after the take off then the plane continue the preset data and will follows the computer instruction given before taxiing.
ReplyDeletethe primary radar will monitor all the information including cross wind knot level. also, boing planes will indicate the air-pocket, strong cross wind, weather description on the route base on the satellite signal to the radar.
in case of such incidents, the pilot temporarily divert the auto pilot to use bypass airway route to avoid such air shake or bounce and will enter the log the reason with reference as why he used alternate way from the preset auto pilot system.
this detail just for information and for your general knowledge only. related airline will investigate for the emergency landings as there are so many procedures in the airfield. Thank you.