சகல பரீட்சை முடிவுகளையும் இணையத்தளம், SMS மூலம் வெளியிட நடவடிக்கை
(எம்.எம்.ஏ.ஸமட்)
பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற சகல பரீட்சை முடிவுகளையும் இணையத்தளம் மற்றும் குறுந்தகவல் சேவைகளினூடாக வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நடவடிக்கையினை இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமும் இலங்கை பரீட்சைத் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் குறிப்பிடுகிறார்.
வருடாந்தம் பரீட்சைத் திணைக்களத்தினால் 300 பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. இருப்பினும், க.பொ.த உயர்தர, சாதாரண தரப் பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் என்பனவே இணையத்தளம் மற்றும் குறுந்தகவல் சேவைகளினூடாக வெளியிடப்படுகின்றன.
பரீட்சார்த்திகளின் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு சகல பரீட்சை முடிவுகளையும் இணைத்தளம் மற்றும் குறுந்தகவல் சேவைகளினூடாக வெளயிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் குறிப்பிடுகிறார்.
அத்துடன், பரீட்சை முடிவுகளைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் www.results.exams.lk என்ற இணையத்தள முகவரிக்கு செல்வதனூடாகவோ அல்லது “exams” என கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து 1919 என்ற இலக்கத்திற்கு அனுப்புவனூடாகவோ பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment