மேற்குலக, கிறிஸ்தவ ஏகாதிபத்தியவாதத்திற்கு நாம் அடிப்பணியக் கூடாது - தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணி
மனித உரிமைகளின் பின்னணியில் இருக்கும் பொய் மற்றும் அரசியலை நன்கு புரிந்து கொண்டு அதனை எதிர்கொள்வதற்காக தேசம் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் தலைவர் போங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் தேசியத்தை அழிக்க உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் சில நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இது கவலைக்குரிய விடயம் இலங்கைக்கு எதிராக மனித உரிமை தொடர்பில் விசாரணை நடத்த எவருக்கும் முடியாது.
கொடூரமான பயங்கரவாதத்தை தோற்கடித்தன் காரணமாக இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளிடம் இருந்து இந்தளவுக்கான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
இலங்கை பயங்கரவாதத்தை தோற்கடிக்காது இருந்திருந்தால், இப்படியான அச்சுறுத்தல்களும், குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட மாட்டாது.
இந்த நிலைமையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.மனித உரிமை என்ற விடயத்திற்கு பின்னால் இருக்கும் பொய் மற்றும் சூழ்ச்சியை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். மேற்குலக கிறிஸ்தவ ஏகாதிபத்தியவாதத்திற்கு நாம் அடிப்பணியக் கூடாது.
தேசியத்தின் அடிப்படையில் நாம் இந்த சதித்திட்டத்தை எதிர்நோக்க வேண்டும். எதிர்காலத்தில் நாம் உலகம் உணரும்படியான ஒன்றை செய்ய எதிர்பார்த்துள்ளோம். அதற்கான வலுவும் சக்தியும் உள்ளது என்றார்.
(14).jpg)
Post a Comment