மேல் மாகாண தேர்தலில் முஜிபுர் ரஹ்மானை ஆதரிக்குமாறு அசாத் சாலி வேண்டுகோள்
எதிர் வரும் மார்ச் மாதம் இடம்பெறவிருக்குமு் முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து மக்கள் வாக்களிக்கவும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண உறுப்பினருமான அசாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளில் குரல் கொடுக்கும் முக்கிய நபராக முஜிபுர் ரஹ்மானும் உள்ளார். முஸ்லிம் மக்கள் கூட்டாக இவரை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இடம்பெறவிருக்கும் மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் தலைமைகளையே ஆதரிக்க வேண்டும். இன்று மேல் மாகாண சிறுபான்மை மக்களை ஆதரித்து அவர்களுக்காக குரல் கொடுப்பதில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும், ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுமே உள்ளனர். எனவே, அவர்களுக்காகவே இம்முறைத் தேர்தலில் எனது ஆதரவினைத் தெரிவிப்பேன்.
அதேபோல் மக்கள் தமது வாக்குகளை இவர்களுக்கு அளித்து இருவரையுமே வெற்றிபெறச் செய்ய வேண்டும். இம்முறை மாகாண சபைத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையினை வெளிப்படுத்த வேண்டும். அதற்கான சரியானதொரு சந்தர்ப்பம் இதுவாகும்.
மேலும் இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தின் அடக்குமுறைகளும், இனவாதிகளின் மோசமான செயற்பாடுகளும் தமிழ், முஸ்லிம் சமூகத்தினை பெரிதும் பாதித்துள்ளது.
எமக்கான மத உரிமைகளையும், கலாசார விலுமிங்களையும் சுதந்திரமாக மேற்கொள்ள முடியாதுள்ளது. எனவே இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் எமது தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியிற்கே தனது ஆதரவு வழங்கப்படும். அதேபோல் விக்ரமபாகு கருணாரத்தினவையும் ஆதரிப்பதாகவும் இதன் போது தெரிவித்தார்.

Vote for JVP......
ReplyDeleteமுஜிபுர்ரகுமானுக்கு அதரவு அழியுங்கள், அதேவேழை ஜனநாயக மக்கள் முன்னைக்கே எனது ஆதரவு. அசாதின் இந்த ஆதரவு கூற்றில் யாருக்காகிலும் ஏதாவது புரின்ச்சுதா?
ReplyDeleteVOTE FOR FOUZI AND CO.
ReplyDelete