Header Ads



கல்முனையில் இரவு நேரங்களிலும் குப்பைகளை அகற்றும் சுத்திகரிப்பு சேவை ஆரம்பம்


கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் குப்பை கூளங்களை அகற்றும் சுத்திகரிப்பு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் கார்யப்பர் நேற்று புதன்கிழமை 26-02-2014 இரவு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உட்பட மற்றும் சில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர சபையின் வரலாற்றில் முதன் முறையாக இரவு நேர சுத்திகரிப்பு பனி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

மாநகர முதல்வர் வழங்கிய ஆலோசனைகளின் பிரகாரம் எமது பிரதம சுகாதார வைத்திய அதிகாரி எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக இச்சேவையை ஆரம்பிக்க முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சேவை முதற் கட்டமாக கல்முனை மாநகர பிரதேசங்களின் பிரதான வீதிகளில் முன்னெடுக்கப்படுவதாகவும் காலப்போக்கில் உள்ளூர் வீதிகளிலும் இரவு நேரங்களில் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.