அம்பாறையில் பகலில் வெப்பம், இரவில் குளிர்
(யு.எல்.எம். றியாஸ்)
அம்பாறை மாவட்டத்தில் தற்போது உஸ்னத்துடன் கூடிய காலநிலை நிலவுகின்றது கடந்த சில நாட்களாக இம்மாவட்டத்தில் கடுமையான வெயிலுடன் கூடிய காலநிலை நிலவுவதால் இம் மாவட்ட மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மிகுந்த சிரமத்திக்கு மத்தியில் கழித்து வருகின்றனர் இதேவேளை இரவு வேளையில் குளிருடன் கூடிய காலநிலையும் இம்மாவட்டத்தில் காணப்படுகின்றது.
இவ்விரு வேறுபட்ட காலநிலைக்கு மத்தியில் இம்மாவட்ட மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மதிய நேரங்களில் வீதிகள் வெருச்சோடிக்கானப்படுகின்றதுடன் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்து காணப்படுகின்றது.
வியாபார நிலையம்களும் கூட மூடப்பட்டு மாலை நேரமே வியாபார நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுகின்றன. தமது வேலை நிமிர்த்தம் வெளியில் செல்லும் வயோதிபர்கள் இக்காலநிலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
.jpg)
Post a Comment