Header Ads



மார்ச் 3,4 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு

(ஏ.எல்.ஜுனைதீன்)

  மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வியாழக்கிழமை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும்  அஞ்சல் வாக்கு அடையாளமிடுதல் தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

  இவ்விரு தினங்களுக்குள் அஞ்சல் வாக்குச் சீட்டை அடையாளம் இடுவதற்காக வருகை தரவேண்டிய திகதி,நேரம் மற்றும் இடம் என்பன அஞ்சல் வாக்காளர்களுக்கு உறுதியாக அஞ்சல் வாக்கு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களால் அறிவிக்கப்படும்.

  இத் தினங்களில் வாக்கினை அடையாளமிடுவதற்கு முடியாமல் போன அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு தகைமை பெற்றவர்களுக்காக தங்கள் வாக்கினை அடையாளமிடுவதற்கு எதிர்வரும் மார்ச் மாதம் 20  ஆம் திகதி வியாழக்கிழமை அலுவலக நேரத்திற்குள் உரிய மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும், கொழும்பு மாவட்டத்திற்காக தேர்தல்கள் செயலகத்திலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் அறிவித்துள்ளார். 

  இவ்வஞ்சல் வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளைக் கண்கானிப்பதற்காக தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சியேட்சைக் குழுக்களின் முகவர்கள் மற்றும் இதற்காக அனுமதியளிக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்புக்களின் கண்காணிப்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களையும் கலந்து கொள்ளச் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் வாக்கு அடையாளமிடுவதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியான அடையாள அட்டைகளாக தேர்தல்கள் திணைக்களத்தினால் பிரகனப்படுத்தப்பட்டுள்ள அடையாள அட்டை ஒன்றை எடுத்து வருதல் வேண்டும்.என்றும் அறிவித்துள்ளார்.

  இதேவேளை, அஞ்சல் வாக்கு அடையாளமிடும் சந்தர்ப்பத்தைப் புகைப்படம் எடுப்பதற்கோ ஒளிப்பதிவு செய்வதற்கோ அனுமதி இல்லாததோடு, சட்ட விரோதமாக எடுக்கப்படும் புகைப்படங்கள் அல்லது காட்சிகளை வெளியிடுதல், ஒளிபரப்புதல் என்பவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அனைத்து ஊடகங்களையும் தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.