இறைவன் என்னை எவ்வாறு படைத்தானோ, அவ்வாறே இருப்பதையிட்டு மகிழ்ச்சி - தாடி வளர்த்த பெண்
அதிக முடி வளர்ச்சியால் பாதிக்கப் பட்டிருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த 23 வயது இளம் பெண், தாம் தாடி வளர்த்துக் கொண்டதையடுத்து அதிக பெண்மை தன்மையை உணர்வதாகக் குறிப்பிட் டுள்ளார்.
பெர்க்ஷெயரை சேர்ந்த ஹர்னாம் கவுர் என்ற பெண், ஹோர்மோன் குறைபாடு காரணமாக தனது 11 ஆவது வயது தொடக்கம் முகத்தில் தாடி வளரும் சிக்கலுக்கு முகம் கொடுத்து வருகிறார்.
வயதுக்கு வரும்போது அவரது நெஞ்சுப் பகுதி மற்றும் கைகளிலும் முடி வளர ஆரம்பித்தது. இதனால் சிக்கலை எதிர்கொண்ட ஹர்னாம், ஒரு ஆண் என்று எண்ணி தாக்குதலுக்கும் உள்ளாகி இருப்பதோடு இணையத்தளத்தின் ஊடே மரண அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருக் கிறார்.
ஆரம்பத்தில் தனது தாடி மற்றும் உடலில் இருக்கும் முடிகளை வெட்டிவந்த அவர் தற்போது அதனை நிறுத்தி தனது சீக்கிய மதத்திற்கு அமைய முடிகளை வெட்டாமல் இருக்க வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். சீக்கிய மதத்தில் உடலில் இருக்கும் முடிகளை வெட்டுவது தவிர்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
"நான் எனது முகத்தில் இருக்கும் முடியை ஒருபோதும் அகற்றப் போவதில்லை. ஏனென்றால் இறைவன் என்னை எவ்வாறு படைத்தானோ அவ்வாறே நான் இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
நான் தற்போது அதிக பெண்மைதன்¨யை உணர்வதோடு அதிக கவர்ச்சியையும் உணர்கிறேன். நான் எனது நிலையை விரும்புவதோடு எவராலும் என்னை நிலைகுலையச் செய்ய முடியாது" என்று அவர் கூறியிருக்கிறார்.
எனினும் ஹர்னாம் கவுர் தனது பதின்ம வயதுகளில் தனது தாடி குறித்து வெட்கப்பட்டு வாரத்திற்கு இருமுறை அதனை மழித்து வந்துள்ளார். எவ்வாறாயினும் அவரது தாடி அதிக அடர்த்தியாகி பரவிய போது வெளியே வர வெட்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்துள்ளார். ஒருசில தருணங்களில் தற்கொலை செய்யவும் முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி ஹர்னாம் கவுர், சீக்கிய மதத்தின் அடிப்படையில் முடியை அகற்றுவதை தவிர்க்கும் வழிபாட்டை செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் தாடி வைக்காமல் இருந்தால் தான் அந்நியமாக இருப்பது போல உணர் வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹர்னாம் தற்போது சீக்கிய ஆரம்ப பாடசாலையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

Post a Comment