Header Ads



புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம் அறிவிப்பாளர் வபாத்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

புதிய காத்தான்குடி-1, டெலிகொம் வீதியில் வசித்து வந்த இளம் அறிவிப்பாளர் புகாரி முகம்மட் ரிஸ்னாஸ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 8.30 மணிக்கு காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்று நோய் வைத்தியசாலை ,மட்டக்களப்பு போதனா வைத்திசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அதிகாலை இவர் காலமானார்.

ஆரம்ப காலத்தில் காத்தான்குடியில் இயங்கி வந்த றிஸாலா வானொலியில் அறிவிப்பாளராக கடமையாற்றிய இவர் பின்னர் ஸாஜில் எப்.எம். இல் அறிவிப்பாளராகவும், ஸாஜில் நியூஸ் இணையத்தள செய்தி சேகரிப்பாளராகவும் மிகவும் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.

இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலயம் ஏற்பாடு செய்த 2012 இளைஞர் விருது விழாவை முன்னிட்டு இடம்பெற்ற இளம் அறிவிப்பாளர் போட்டியில்; எஸ்.எச்.எஸ்.புகாரி றிஸ்னாஸ் முஹம்மட் முதலாமிடம் பெற்று சாதனை படைத்தமை இவருக்கு கிடைத்த வெற்றியாகும்.

இவரது சுவன வாழ்வுக்காக அனைவரையும் அல்லாஹ்விடம் பிராத்திக்குமாறு ஊடக அமைப்புக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இவருடைய ஜனாசாத் தொழுகை இன்று 14-02-2014 வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகையின் பின்னர் புதிய காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜூம்மா பள்ளிவாயலில் இடம் பெற்று அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments

Powered by Blogger.