Header Ads



இலங்கை வீரர் சந்திமால் சாதனை

கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான தீர்மானமிக்க இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 121 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிட்டகொங்கில் நடைபெற்றும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் சார்பில் எந்தவொரு வீரரும் 30 ஓட்டங்களை தாண்டாத நிலையில் ஷபிர் ரஹ்மான் மாத்திரமே 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இலங்கை பந்துவீச்சில் லசித் மாலிங்க 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், நான்கு பிடிகளை எடுத்ததன் மூலம் சர்வதேச இருபதுக்கு-20 போட்டி ஒன்றில் இலங்கை சார்பில் அதிக பிடிகளை எடுத்த வீரர் சாதனையை தன்வசப்படுத்தினார்.

இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.