Header Ads



மஹிந்த ராஜபக்ஸ, ஒருபோதும் அநியாயம் செய்யமாட்டார் - ஹரீஸ்

(யு.எம்.இஸ்ஹாக்)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம்  இந்த நாட்டை ஆட்சி   செய்யும்   வரை இந்த நாட்டில் உள்ள எந்தவொரு விவசாயியும்  புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதியுடன் கூற முடியும் என பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார் .

ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ அவர்கள் வீரகெட்டிய விவசாயக் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து விவசாயிகளின் இன்ப துன்பங்களை அனுபவித்தவர் அவர் ஒரு போதும் விவசாயிகளுக்கு அநியாயம்  செய்ய மாட்டார் .

அதனால் தான் விவசாயிகளுக்கான உரமானியத்தை  பல தடங்கல்களுக்கும் ,எதிர்ப்புகளுக்கும் மத்தியில்  தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான இந்த அரசாங்கத்தில்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை .இதற்க்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சி புரிந்தவர்கள் விவசாயிகளை கவனத்தில்   கொள்ளவில்லை  அதனால்தான் அவர்கள் இந்த நாட்டில் வெகுவாக மறக்கடிக்கப் பட்டார்கள் .

அதே போன்றுதான்   நெற்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் அம்பாறை   மாவட்டத்தின்  விவசாயத்துறையை ஜனாதிபதியின் உதவியுடன் மேலும் அபிவிருத்தி செய்ய  நடவடிக்கை எடுத்து வருகின்றேன்  அதன் ஒரு   கட்டமாகவே கரவாகு வடிச்சல் திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது  இதற்கு தேவையான நிதியை எனக்கு ஜனாதிபதி நிச்சயம் தருவார் என்ற நம்பிக்கை இருப்பதாக விவசாயிகளிடம் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார் .

கரவாகு வடிச்சல் திட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டதின்  போதே அவர் இவ்வாறு அங்கு பேசினார் 

3 comments:

  1. மிஸ்டர் ஹரீஸுக்கு விவசாயம் தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன என்பதை அறியமுடியும்,அதனைக்கொண்டு மட்டும் ஜனாதிபதி ஒருபோதும் அனியாயம் செய்ய மாட்டார் என பொதுவான வழக்கில் நினைக்ககூட வேண்டாம்.
    சுகபோக வாழ்க்கையில் நீந்தும் உங்களுக்கெல்லாம் மனிதனின் எல்லா பக்கங்களும் தெறியவே தெறியாது.யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கருடன் சொன்னது,அதில் அர்த்தமுள்ளது.

    ReplyDelete
  2. Thirutha mydiyadha jammangle

    ReplyDelete
  3. எனது ஆழ்ந்த அனுதாபங்களை ஹரிஷ் எம்பிக்கும் அவரது பேச்சை நம்பும் அப்பாவி மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவர்களை திருத்தவும் முடியாது, திருந்தவும் மாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.