Header Ads



அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு பாதணிகள் அன்பளிப்பு


(எஸ்.ஜமால்டீன், எம்.பி.எம்.சித்தீக்)

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் கட்டாரில் கணிய அளவையியலாளராக (டீ.ளுஉ ஞளு) பணிபுரியும் நளீர் ஆதம்லெப்பை என்பவரினால் அன்பளிப்பு செய்யப்பட்ட பாதணிகளை தெரிவுசெய்யபட்ட 100 மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதாஉல்லாஹ் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (2014.02.17) இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீன் உரையாற்றுவதனையும் மாணவர்களுக்கு அதிபர் பாதணிகளை வழங்கி வைத்தார். இதன்போது தரம் 11 வலயத்தலைவர் எச்.எல்.ஹாறுக், சிரேஷ்ட ஆசிரியர்களான எம்.சி.கலீலுர்ரஹ்மான், எஸ்.எச்.ஆர்.எஸ்.ஹமீட், மௌலவி எம்.ஐ.றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  


No comments

Powered by Blogger.