அட்டாளைச்சேனையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள்
(ஏ.எல்.ஜனூவர்)
அட்டாளைச்சேனையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் பாவனைக்கு அண்மையில் கையளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும், நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ.உதுமாலெப்பையின் நிதியில் அட்டாளைச்சேனை றஹ்மானியா பாத் கிராமத்தில் அமைக்கப்பட்ட 35 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் திறப்பும், 04மில்லியன் செலவில் இக்கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் மின்சார இணைப்பும் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை 15.02.2014 கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் எம்.எச்.அப்துல் றஹ்மான் (அதிபர்) தலைமையில் இடம்பெற்றது.
தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கையளித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஐ.எல்.ஹைதர் அலி, உள்ளுராட்சி மாகாண சபைகள அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எப்.பஹ்ஜி உட்பட அரசியல் உயர் அதிகாரிகளும், தினைக்கள தலைவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



Post a Comment