Header Ads



அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் முப்பெரும் விழா


(எம்.ஏ.றமீஸ்)

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முப்பெரும் விழா அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இன்று(15) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொண்டார். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம்,அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில்,பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி உள்ளிட்ட கல்வியியலாளர்கள் அரசியற் பிரமுகர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது, கடந்த வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும்  இம்மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களும்  பாராட்டிக் கௌவிக்கப்பட்டனர். அத்தோடு இவ்வாண்டு தரம் ஒன்றில் அனுமதி பெற்ற புதிய மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் வித்தியாரம்ப வைபவம் இடம்பெற்றது.

இதேவேளை இந்நிகழ்வின்போது ஆசிரியர் ஏ.ஜீ.சமூர் தன் மாணவர்களால் எழுத்துருவாக்கி தொகுக்கப்பட்ட 'துரித கணிதம்' பாட நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றதுடன் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களுக்கு தூய பசும்பால் வழங்கி வைக்கும்  நிகழ்வும் தெரிவு செய்யப்பட்ட துறைசார்தோர் சிலரும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வும் இதன்போது மேடையேற்றப்பட்டன.


No comments

Powered by Blogger.