Header Ads



வெள்ளி விழா கொண்டாடும் அப்துல் காதர்

1989 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவான அமைச்சர்கள் உட்பட 8 பேர் இன்று வெள்ளி விழாவை கொண்டாடுகின்றனர்.

அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, மைத்திரிபால சிறிசேன, ஜோன் செனவிரட்ன, அப்துல் காதர் ஆகிய அமைச்சர்களும், எதிர்க்கட்சியை சேர்ந்த திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இன்று வரை தொடர்ந்தும் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் இவர்கள் அனைவரும் 1989 ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதியே நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அன்று தொடர்ந்து 25 ஆண்டுகளாக இவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.