Header Ads



சாரணியம் இன மத மொழி வேறுபாடுகளற்ற ஒரு பொதுவான அமைப்பாகும் - கலாபூசணம் எம்.ஐ.எம்.முஸ்தபா

(யு.எம்.இஸ்ஹாக்)

சாரணியம் இன மத மொழி வேறுபாடுகளற்ற  ஒரு பொதுவான அமைப்பாகும் தமது சமயத்திற்கும், நாட்டிற்கும்  சேவை  செய்யக் கூடிய  நல்லவர்களை எதிர் காலத்துக்கு  ஏற்ற நற் பிரஜைகளை  உருவாக்குவதில் சாரணியம் பெரும் பங்கு வகிக்கின்றது .

இன்று உலகில் இளைஞசர்களை  கவர்ந்த  ஓர்  அமைப்பு சாரணியமாகும் இதனூடாக சிறந்த பண்புகளையும் ,ஆற்றல்களையும் பெற்றுக் கொள்ள முடியும் .இதனை வளர்த்து கொள்வதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் முன்வர வேண்டும்  அர்பணிப்பு மிக்க ஆசிரியர்களால் சாரணியத்தை  பாடசாலைகளில்  நல்ல முறையில் கொண்டு செல்ல முடியும் .

நேற்று அக்கரைப்பற்று வலயக் கல்வி  அலுவலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற  ஆசிரியர்களுக்கான  பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சாரணிய மாவட்ட ஆணையாளர் கலாபூசணம் எம்.ஐ.எம்.முஸ்தபா குறிப்பிட்டார். உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஜெமீல்  தலைமையில் இடம் பெற்ற  இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.எம்.ஹம்மாத் உட்பட  பலரும் கலந்து சிறப்பித்தனர் .

தொடர்ந்து இந்நிகழ்வில் உரையாற்றிய முஸ்தபா குறிப்பிட்டதாவது.

இலங்கையில் சாரணிய அபிவிருத்தி நடவடிக்கைகளை  இலங்கை சாரணர் சங்கம் மேற் கொண்டு வருகின்றது. இலங்கைக்கு சாரணியம் அறிமுகமாகி 100 ஆண்டுகள் கடந்து விட்டன அரசும் மாகாண அமைச்சும்  சாரணிய வளர்ச்சிக்காக  உதவுவது பாராட்டுக்குரியதாகும் .சாரணிய தலைவர்கள் நேர்முக பரீட்சைகளில் அதிக புள்ளிகளை பெறுவதற்கு  வாய்ப்புக்களும் இன்று கிட்டியுள்ளன " என்றும் அவர் குறிப்பிட்டார். இக்கருத்தரங்கில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .

1 comment:

  1. is possible to find Mustafa sir contact number? i will greatful to Jaffna muslim if i get to know his contact number.

    ReplyDelete

Powered by Blogger.