Header Ads



சமுகஜோதி ரபீக் எழுதிய/யாத்த சன்மார்க்க கீதங்கள் அடங்கிய இருவெட்டுக்கள் வெளியீடு

(அஸ்ரப் ஏ சமத்)

சமுகஜோதி ரபீக்கின் எழுதி யாத்த சன்மார்க்க கீதங்கள் அடங்கிய இருவெட்டுக்கள் வெளியீடு நேற்று 24-02-2014 கொழும்பு பிரைட்டன் கோட்டலில் நடைபெற்றது. பிரதம அதிதியாக நீதியமைச்சரும் முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம், அமைச்சர் பசீர் சேகுதாவுத், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி, மற்றும் புரவலர் ஹாசீம் உமர். தொ. ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அத்துடன் கலைவாதிக் கலீல், நஜ்முல் ஹூசைன், மஹ்ருப் கரீம், கவிஞர் ஹசீர் ரவுப், ஆகியோறும் கவிதை பாடினார்கள். நயவுரையை சமுகஜோதி ரபீக் நிகழ்த்தினார்.  புரதம அதிதியின் உரையை அமைச்சர் ரவுப் ஹக்கீம்  நிகழ்த்தினார்.

இங்கு நயவுரை நிகழ்த்திய சமுகஜோதிரபீக் - என்னிடம சில அரசியல்வாதிகள் தொடர்புகொண்டு ஏன் எனது வைபவத்திற்கு ரவுப் ஹக்கீமை அழைத்தீர்கள் என தொலைபேசியில் கேட்டனர்.  நான் மண்னாரைப் பிடப்பிடமாகக் கொண்டாளும் எனது இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் அழைப்பதற்கு சகல தகுதிகளும் ரவுப் ஹக்கீமுக்கே  உள்ளது. முடியுமானால் ஏனைய அரசியல்வதிகளுக்கு நான் சவால்விடுகின்றேன் அவருக்கு தகுதி இல்லையென்று என்னிடம் விவாதிக்க வருமாறு சவால் விடுவதாகவும் ரபீக் தெரிவித்தார்.





No comments

Powered by Blogger.