Header Ads



மாதாந்த பயான் நிகழ்ச்சி

அல் ஹப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட பயான் நிகழ்சி  இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைத் தொடர்ந்து 12.30 மணியளவில் தஃவா நிலைய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் எமது விஷேட அழைப்பை ஏற்று அல் கோபார் தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் ஈமானிய இன்பம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

மேலும் இந்நிகழ்சி முடிவில் கேள்வி – பதில் இடம் பெற்று தகுந்த பரிசில்களும் வழங்கப்படும். ஆண், பெண் இரு பாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் பகல் போசனமும் தயார் செய்யப்பட்டுள்ளது. 

எனவே தமிழ் பேசும் உள்ளங்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தவராது கலந்து பயன்பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

No comments

Powered by Blogger.