Header Ads



கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொடரும் அவலம்..!

(யு.எம்.இஸ்ஹாக்)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பார்வையாளர் அரங்கில்  தங்குவதற்கு  வருபவர்களிடம் பணம் அறவிட்டும்  அவர்கள் தரையில் துண்டுகளையும் , பொலிதீன் களையும்  விரிப்பாக்கி  உட்காரும் அவலம்  தொடர்கிறது.

ஆசியாவின் ஆச்சரியம்மிக்க நாடாக மாற்றும் இந்த அரசாங்கத்தினால் இந்த அரங்கை நவீன மயப்படுத்தி இருப்பதற்கு ஆசனம் போடவேண்டிய தேவை அங்கு கூடும் ஒவொருவராலும் பேசப்படுகின்ற கதையாக உள்ளது.

வெளி நாடு செல்பவர்களை வழி அனுப்பி வைக்க தூர இடங்களில் இருந்து வரும் அவர்களது உறவினர்கள் நுழைவு கட்டணம் 300 ரூபா என்பதால்  உள்ளே செல்ல தயங்குகின்றனர். எனினும் பார்வையாளர் அரங்குக்கு செல்வதற்கு 20 ரூபா அறவீடு செய்யப் படுவதால் அதனை சமாளிக்கக் கூடிய நிலையில் உள்ளே சென்று தரையில்  கிடக்க வேண்டியுள்ளது. சிறு குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள்  தங்களது  குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கே  அவஸ்தைப் படுகின்றனர். எடுத்து செல்லும் உணவை  தரையில் இருந்தே உண்ணுகின்றனர் .

எனவே பணத்தை அறவீடு செய்து உள்ளே அனுமதிக்கும் விமான நிலைய அதிகாரிகள் அந்த அப்பாவி மக்களுக்கு  இருக்கை  வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்  என்பதே  ஜப்னா முஸ்லிம் இணையதளத்தின்  வேண்டுதலாகும்.



No comments

Powered by Blogger.