Header Ads



கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உதவி


கிண்ணியா பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களின் 34 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிர்மானிக்கப்பட்ட மாநாட்டு மன்டப மேல் மாடிக் கட்டிடத்தினையும், அதன் பாவனைக்காக முதலமைச்சரின் 6 இலட்சம் ரூபா நிதியிலிருந்து  கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்களையும் கையளிக்கும் நிகழ்வு 07.02.2014 வெள்ளிக் கிழமை இடம்பெற்றது. 

கிண்ணியா பிரதேச செயலாளர் சீ. கிருஷ;னேந்திரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் கட்டிடத்தை திறந்து வைப்பதையும் வறிய மக்களுக்கு கூரைத்தகடு, தையல் இயந்திரம், தண்ணீர் இரைக்கும் இயந்திரம் மற்றும் குளிர் சாதனப் பெட்டி ஒன்றை கையளிப்பதையும், கிண்ணியா பிரதேச செயலாளர் முதலமைச்சருக்கு பென்னாடை போற்றுவதையும் இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ளு. தௌபீக் மற்றும் கிழக்கு மாகாண முதமைச்சரின் இணைப்புச் செயலாளர்  அஸ்வத்கான் கலந்து கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.

இந் நிகழ்வில்; முதலமைச்சர்  உரையாற்றும் போது ' மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் திகோணமலை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. இதில் குறிப்பாக கஷ;டப்பிரதேசக் கிராமங்களின் உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களுக்கு கொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக பல கோடி ரூபாக்களை செலவு செய்து அவ்வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். 

மேலும் கிண்ணியா பிரதேச செயலகத்தினை பொருத்த வரையில் நிருவாகத்தினை திறம்பட முன்னெடுக்கக்கூடிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பதோடு அவருக்கு உருதுணையாக சிறப்பாக செயற்படக் கூடிய பதவி நிலைத்தர உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பிரதேச செயலகத்திற்கு அவசியமான ஆளணிகள் அனைத்தும் பெரும்பாலும் நிரப்பப்பட்டிருக்கின்றன. விNஷடமாக மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் இப்பிரதேச பட்டதாரி இளைஞர் யுவதிகளுக்கு இங்கு நியமனம் செய்யப்பட்டிருப்பதும் பிரதேச செயலகத்திற்கு வலுவூட்டுவதாக அமைகிறது. 

மிக விரைவில் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு ஐந்து கோடி ரூபா செலவில் அதி நவீன வசதிகளைக் கொண்ட மூன்று மாடிக் கட்டிடத்தினை நிர்மாணித்துத் தரயிருப்பதாகவும் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார். 


No comments

Powered by Blogger.