அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்தி - சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பு
(எம்.எம்.ஏ.ஸமட்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்துவதற்கான சந்திப்பொன்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினருக்குமிடையில் நடைபெற்றுள்ளது
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உடகட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் ஏற்பாட்டுடன் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனைவை அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
கல்முனைப் பிரதேச மக்களினதும் ஏனைய பிரதேச மக்களினதும் ஆரோக்கிய வாழ்வுக்குக்கான வைத்திய சேவையை வழங்கி வரும் இவ்வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்து முன்னாள் அமைச்சர் மன்சூருடன் சென்ற அபிவிருத்திக் குழுவினர் சுகாதார அமைச்சரிடம் எடுத்துரைத்தற்கமைய அபிவிருத்தி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் அதற்கான உதவிகளைப் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதாக அபிவிருத்திக் குழுவினர் தெரிவித்தனர். இச்சந்திப்பின் போது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். நசீர், டாக்டர் வை.எல் யூசுப் உட்பட உறுப்பினர் பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த இவ்வைத்தியசாலையின் வெள்ளிவிழா வைபவத்திற்கு பிரதம விருந்தினராக வருகை தர விருந்த சுகாதார அமைச்சரின் பிரசன்னம் தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Post a Comment