இங்கிலாந்தில் அக்குரணை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்
(Ash Sheikh M Z M Shafeek)
அக்குரணை நலன்புரிச் சங்கம் - UK ( Akurana Welfare Association- UK ) இன் 06 ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் (6th Annual General Meeting) லெஸ்டர் வாழ் அக்குரணை உறவுகளின் ஒன்று கூடலின் மூலம் அண்மையில் லெஸ்டர் நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அப்ராரில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இச்சங்கத்தை தோற்றுவித்ததற்கான பிரதான இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று ஆத்மீகம், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம்,பொதுவசதிகள் மற்றும் மீடியா என சகல துறைகளிலும் எமதூர் தன்னிறைவு பெறுவதில் எம்மாலான பங்களிப்பைச் சிறப்பாக வழங்குவதாகும். அந்த வகையில் கடந்த 07 வருட காலப் பகுதிக்குள் எமது சங்கத்தினால் திரட்டப் பட்ட பல மில்லியன் ரூபாய்கள் எமதூர் அக்குரனையின் முன்னேற்றத்தில் பங்களிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.அள்ளாஹ்வுக்கே எல்லாப் புகழும். மற்றைய பிரதான நோக்கம் யாதெனில்; லெஸ்டர் வாழ் அக்குரணை முஸ்லிம்களை ஒன்றிணைத்து அவர்களுக்கிடையிலான தொடர்பை மேலும் பலப்படுத்துவதினூடாக சிறந்த பல இலக்குகளை எய்திக் கொள்ளுவதாகும். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சங்கத்திற்கான புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப் பட வேண்டும் என்பதற்கு அமைவாக சென்ற 12/01/2014 அன்று நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னைய நிருவாகம் கலைக்கப் பட்டு புதிதாக 08 நிருவாகிகள் தெரிவு செய்யப் பட்டார்கள்.
அவர்களின் பெயர் விபரம்: (01) Mohamed Ajmeer (02) Mohamed Jiffry (03) Shafeek Mohamed (04) Rifkhan Mohamed (05) Shifan Mohamed (06) Fawas Mohamed (07) Faizal Shareef (08) Mohamed Nawfer. மிகச் சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் Ash Sheikh M Z M Shafeek அவர்களால் ஐக்கியம் சகோதரத்துவம்,தீன் வழியில் செலவு செய்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒரு சிறப்புரை நிகழ்த்தப் பட்டது. மேலும் இக்கூட்டத்துக்கு மிகவும் கணிசமான தொகையினர் வருகை தந்திருந்தது விசேட அம்சமாகும். இறுதியாக இராப் போசனத்துடன் கூட்டம் இனிதே நிறைவுக்கு வந்தது. குறிப்பு: மேலதிக தகவல்களுக்கு : awauk@hotmail.com
Post a Comment