சிங்கள ராவய மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் - கொழும்பு புறக்கோட்டையில் பதற்றம்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டையிலிருந்து கோட்டைக்கு செல்லும் ஒருவழிப் பாதையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிலிருந்து கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு பௌத்த பிக்குகளினால் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று 18-02-2014 பகல் சிவில் உடையில் சென்ற இனந்தெரியாத நபர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் தற்போது பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
மிருகவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மாடுகளை அறுப்பதனை தடைசெய்யுமாறு சிஹல ராவய அமைப்பினர் மேற்கொண்டுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்தே இந்த பதற்றம் நிலவுகின்றது.
.jpg)
Post a Comment