ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவு வழங்கப்படும் - மற்றுமொரு முஸ்லிம் நாடு உறுதியளிப்பு
30 வருடகால போருக்கு பின்னர் இலங்கை பாரிய அபிவிருத்தியை நோக்கி நெருங்கியுள்ளதால் மனித உரிமைகள் துரித வளர்ச்சி கண்டுள்ளதாக இந்தோனேசியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் வர்தன் தெரிவித்துள்ளார்.இதனால் இலங்கையை தாம் எப்போதும் பாராட்டுவதாகவும் முடிந்த சகல சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள அமைச்சர் டிலான் பெரேரவை சந்தித்த போதே இந்தோனேசிய பிரதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்தோநேசிய அங்கத்துவத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment