Header Ads



தனிமையாக காட்சியளிக்கும் 150 பழமைவாய்ந்த ஜாமியா மலே மிலிட்டறி ஜூம்ஆ பள்ளிவாசல் (படங்கள்)


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

கொழும்பு கொம்பனித்தெருவில் சிலபகுதிகள் கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இங்குள்ள மக்களுக்கென இப்பிரதேசத்தில் புதிதாக தொடர்மாடி தொகுதி அமைக்கப்பட்டு புதிய வீடுகள் இப்பிரதேச மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இம்மக்கள் இரண்டு வருடகால வாடகைப் பணம் பெற்று பிரதேசத்தை விட்டு தற்காலிகமாக வெளியேறியுள்ளனர். பிரதேச மக்கள் வெளியேறியபின் அம்மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக காணப்படுகின்றது. இந்நிலையில் ஜாவாலேன்  பள்ளிவாசலைச் சூழவுள்ள மக்களின் வீடுகள் அகற்றப்பட்டு மஸ்ஜிதுல் ஜாமியா மலே மிலிட்டறி ஜூம்ஆ பள்ளிவாசல் மட்டும் தோற்றமளிப்பதை காணலாம்.

இதுவரை காலமும் முழுமையான பள்ளிவாசல் தோற்றத்தை காணமுடியாமல் இருந்தவர்கள் தற்போது இப்பள்ளிவாசலின் முமையான தோற்றத்தை காணக்கூடியதாக இருக்கின்றது. இப்பள்ளிவாசல் ஆரம்பிக்கப்பட்டு நேற்று 13-02-2014 வியாழக்கிழமையுடன் 150 வருடங்களாவது இங்கு குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.