கொல்லப்பட்ட, காணாமல் போன முஸ்லிம்கள் - ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது மு.கா.
சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் தொடர்பில் தற்போதைக்கு சர்வதேச விசாரணைகளை கோரப் போவதில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் சர்வதேச விசாரணைகளை கோருவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் உள்ளக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே தற்போதைய தேவையாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் 20000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரி ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் முஸ்லிம் மக்கள் நீதிக்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
முஸ்லிம் ஊர்காவல் படையினரால் கற்பழித்து கொலைசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் யுவதிகள் பற்றியும் வீரமுனை நீலாவணை மஞ்சந்தொடுவாய் வாழைச்சேனை போன்ற பகுதிகளில் தொகுதி தொகுதியாக முஸ்லிம்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் விபரங்கள் பற்றியும்.தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன இவ் விபரங்கள் விரைவில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDelete