கொலேஸ்டரோளைக் குறைப்பதற்கு பயன்படுத்தும் மருந்துகளால் ஏற்படும் அபாயங்கள்..!
(உமர் அலி முகம்மதிஸ்மாயில்)
கொலேஸ்ட்ரோல் இன்று யாவருக்கும் ஒரு தலையிடியாகவே கருதப்படுகின்றது. குறைப்பதற்கு நோயாளர்கள் பிரம்மப்பிரயத்தனம் எடுக்கின்ற அதேவேளை கொலேஸ்டரோல் பிரச்சினையை பயன்படுத்தி உலகில் பல நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கும் உத்திகளை பல நிறுவனத்தினர் கையாளுகின்றனர்,இதற்காக கொலேஸ்டரோளை குறைக்கும் மருந்துகள் என கண்ட கண்ட இரசாயன,மூளிகைகளினாலான பொருட்களை சந்தையில் விட்டு சம்பாதிக்கின்றனர்.
இவ்வாறு விற்கப்படும் பொருட்களின் தரம் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது மட்டுமன்றி இவற்றினால் உயர் குருதியமுக்கம்,(HYPERTENSION),மாரடைப்பு (HEART ATTACK),மூச்சுக்கச்டம்,STENOTHORAXபோன்ற மிகவும் பாரதூரமான பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.இணையத்தளங்கள் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டு கடனட்டைகளின் மூலமாக அதிக விலைக்கு விற்கப்படுகின்ற இந்தப்போருட்களை வாங்குவதில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னிற்கின்றார்கள்.
நேற்று 2014 Feb 17 ஆம் திகதி ஓமான் நாட்டில் வெளியாகும் தினசரிப்பத்திரிகை மூலமாக அந்நாட்டு சுகாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டிருக்கின்றது.
எனவே மக்கள் இப்பொருட்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.


Post a Comment