கிண்ணியா தள வைத்தியசாலையை தரமுயர்த்த முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் நடவடிக்கை.!
கிண்ணியா தளவைத்தியசாலையை தரமுயர்த்தி அபிவிருத்திசெய்ய கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் நடவடிக்கை மேட்கொண்டுள்ளார். தற்போது கிண்ணியா, தம்பலகமம், சீனக்குடா, வெள்ளைமணல் போன்ற பகுதிகளிலிருந்து வரும் சுமார் ஒருலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கிவரும் இவ்வைத்தியசாலையானது பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகிறது.
மனித வளம், உள்கட்டமைப்பு குறைபாடுகளுடன் "Type B" தரத்திலிருக்கும் இத்தளவைத்தியசாலையை "Type A" தரத்திற்கு தரமுயர்த்துமாறு சுகாதார அமைச்சர், அமைச்சின் செயலாளர் வைத்தியகலாநிதி நிஹால் ஆகியோருக்கு கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கமைவாக கிண்ணியா வைத்தியசாலையை "A" தர தளவைத்தியசாலையாக தரமுயர்த்த தேவையான பூரண அறிக்கைகளை உடனடியாக அனுப்பிவைக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
(முதலமைச்சரின் ஊடகப்பிரிவு)

Its useless to upgrade the hospital without its perfect service rendered to the public under the existing capacity
ReplyDelete