குடு அமைச்சர்கள் ஜெனீவாவுக்கு சென்று வெற்றி பெற முடியாது - சஜித் பிரேமதாஸ
(Nf) ஹம்பாந்தோட்டை தலாவை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொனறில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்த கருத்து,
“எதனோல் அமைச்சர்களும் குடு அமைச்சர்களும் ஜெனீவா சென்றால் எப்படியிருக்கும். தரமற்ற மின்உற்பத்தி நிலையங்களை அமைத்த அமைச்சர்கள் ஜெனீவா சென்றால் நாட்டுக்கு எவ்வாறான அழிவுகள் ஏற்படும். தமது குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்கவே ஜெனீவாவுக்கு செல்கின்றனர். இதற்கான செலவை நாட்டு மக்கள் செலுத்துகின்றனர். தகுதியற்ற அமைச்சர்கள் ஜெனீவாவுக்கு சென்று வெற்றி பெற முடியாது. ஜெனீவா பேரவை தொடர்பில் பேசுவதை விடுத்து, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றி, ஜனநாயக உரிமையை நடைமுறைப்படுத்தினால் ஜெனீவாவில் எமக்கு நிச்சியமாக வெற்றி கிடைக்கும்”

Post a Comment